கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் ஒப்பந்த செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பணிக்காலமானது கடந்த 2022 டிசம்பர் 31ம் தேதியோடு முடிவடைந்த நிலையில் ஒப்பந்த செவிலியர்களின் பணிக்காலம் மேலும் நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அத்தகைய திட்டம் இல்லை என்று அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. இதனால் அதிருப்தி அடைந்த ஒப்பந்த செவிலியர்கள் தங்களுடைய பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அரசை வலியுறு த்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் போராட்டம் நடத்தும் ஒப்பந்த செவிலியர்களுடன் இன்று ஜன.,7) பேச்சு வார்த்தை நடத்த அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால், ஜனவரி 9ஆம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்படும் என செவிலியர்கள் போராட்டக்குழு எச்சரித்துள்ளது. முன்பு அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.