பெலாரஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று காலமானார்… வெளியான தகவல்…!!!!

பெலாரஸ் நாட்டு  வெளியுறவுத்துறை அமைச்சர் விளாடிமிர் மேகி மரணம் அடைந்துள்ளதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகம்  இன்று அறிவித்துள்ளது. அவரது மறைவு தொடர்பான விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இந்நிலையில் வெளியுறவு அமைச்சர் மேகியின் மரணம் பற்றி அவரது குடும்பத்தினருக்கு பெலாரஸ் ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார். 1958-ஆம் வருடம் பெலாரசின் க்ரோட்னோ பிராந்தியத்தில் பிறந்தவர் மேக்கி. இவர் ஜெர்மன் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் சரளமாக பேசக் கூடியவர்.

மேலும் 1980-ஆம் வருடம் மின்ஸ்க் மாநில கல்வியியல் நிறுவனம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் இராஜதந்திர அகாடமியில் பட்டம் பெற்றுள்ளார். கடந்த 2012-ஆம் வருடம் முதல் பெலாரஸ் அரசின் குடியரசு வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். 2000 – 2008-ஆம் வருடம் வரை மேகி பெலராஸ்  குடியரசு ஜனாதிபதியின் உதவியாளராக பணியாற்றியுள்ளார். இவர் வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் எஸ்.ஜெய்சங்கருடன் பலதரப்பு ஒத்துழைப்பு, இந்தியாவுடன் இருதரப்பு பொருளாதார உறவுகள், உக்ரைன் ரஷ்யா மோதல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம் மேற்கொண்டுள்ளார்.