பெற்ற தாயே…. 5 வயது மகனுக்கு செய்த கொடூர செயல்…. நதிக்கரையில் ஒதுங்கிய உடல்…. பெரும் சோகம்….!!!!

பிரித்தானியா என்ற நாட்டில் லோகன் முவாங்கி(வயது 5) என்ற சிறுவனது  உடல் Bridgend என்ற பகுதியில் உள்ள, அவனது வீட்டில் இருந்து 250 மீட்டர் தொலைவில் இருக்கும் ஓக்மோர் என்ற நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த 5 வயது சிறுவனை கொலை செய்த குற்றத்திற்காக, சிறுவனின் தாய், வளர்ப்பு தந்தை, மற்றும் 14 வயது மதிக்கதக்க சிறுவன் உள்ளிட்ட  3 பேருக்கு, நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

இதனை அடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணையானது,  கார்டிஃப் கிரவுன் என்ற நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது இந்த சம்பவத்தில் சிறுவன் லோகனுக்கு 56 வெளிப்புற வெட்டுக்களும் மற்றும் பயங்கரமான உள் காயங்களும் ஏற்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் சிறுவனுக்கு ஏற்பட்ட காயங்கள் அனைத்தும் அதிவேக விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களின் காயங்கள் போலவும் மற்றும் உயரத்திலிருந்து விழுந்தவர்களின் காயத்தை போன்றும் இருந்ததாக நீதிமன்றத்தில் விளக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் கொலை குற்றவாளியாக, சிறுவனின் தாயார் அங்கரட் வில்லியம்சன்(வயது 31) ஏற்கனவே அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் சிறுவனின் தாயாருக்கு, 28 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அவனது வளர்ப்பு தந்தை ஜான் கோலுக்கு, 29 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும். இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து, இந்த கொடுங்செயலுக்கு மூல காரணம்,  லோகனின் தாயை, அவனது தந்தையான பென் முவாங்கி ஏமாற்றிவிட்டான் என்ற எண்ணத்தில், இந்த குற்றவழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் ஆவேசமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *