“பெற்றோர்கள் கவனத்திற்கு” இந்த வயதில் தான் திருமணம் செய்ய வேண்டும்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிக்கை….!!!!

மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள குவாகம் கிராமத்தில் வைத்து பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி மேலாண்மை துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் நமது மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் உள்ளிட்ட பல்வேறு   பகுதிகளில் அதிக அளவில்   குழந்தை திருமணம் நடைபெறுகிறது. இந்நிலையில் பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு 18 வயது முடிந்த பிறகும், ஆண்களுக்கு  21 வயது முடிந்த பிறகும்  திருமணம் செய்து வைக்க வேண்டும். மேலும் குழந்தை திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *