பெற்றோர்களே… குழந்தைகளுக்கு டயப்பர் அலர்ஜியைப் போக்க எளிய டிப்ஸ்…!!!

டயப்பர் அணிவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளை குணமாக்க சில எளிய டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு டயப்பரை அதிகம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இவை சில பயன்களைத் தந்தாலும், குழந்தைகளுக்கு சரும பிரச்னைகளையும் தருகின்றன. இதன்மூலம் ஏற்படும் அலர்ஜி போன்ற சரும பிரச்னைகளைக் குணமாக்க சில எளிய டிப்ஸ்.

குழந்தைக்கு ஒவ்வொரு முறை டயப்பரை மாற்றும் போது சுத்தமான தேங்காய் எண்ணெய்யால் தேய்த்து மசாஜ் செய்வது நல்லது. அலர்ஜி அதிகமாக இருந்தால் ஒவ்வொரு முறை சுத்தம் செய்தபின்னரும் சிறிது நெய்யைத் தடவ வேண்டும். தொடர்ந்து நெய் தடவும் போது அலர்ஜி விரைவில் மறையும். மேலும் ஷீ பட்டர் பயன்படுத்தலாம். இதற்கு பூஞ்சைகளைக் கொல்லும் தன்மை உண்டு. இளஞ்சூடான நீரில் குழந்தையை சுத்தம் செய்து ஷீ பட்டரைத் தடவலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *