பெற்றோர்களே….! “குழந்தைகளுக்கு சளி, இருமல் இருந்தால்”…. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு….!!!

குழந்தைகளுக்கு சளி காய்ச்சல் இருமல் போன்றவை இருந்தால் டாக்டரிடம் பரிசோதனை செய்துவிட்டு பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  தமிழகத்தில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றது. தொற்று பாதிப்பு உள்ள இடங்களில் தமிழக அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “தமிழகத்தில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறையின் சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு முன்பு அவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற சிறிய அளவிலான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று ஆலோசனை பெறுவது அவசியம்.

அவர்களை பரிசோதித்து விட்டு மீண்டும் பாதிப்பு இல்லை என்றால் பள்ளிக்கு அனுப்பலாம். ஒரு குழந்தைக்கு பாதித்தால் அது நூற்றுக்கணக்கான குழந்தைகளை பாதிக்கும். எனவே சிறிய அளவில் சளி, இருமல் போன்ற பாதிப்பு என அலட்சியமாக இல்லாமல் பரிசோதனை மேற்கொண்டு மற்ற குழந்தைகளுக்கு அந்த பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *