புதுக்கோட்டை கரம்பக்குடி பகுதியில் நான்கு வயது சிறுவன் தெருவில் நின்று கொண்டிருந்தார். அந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய் திடீரென சிறுவனை பாய்ந்து முகத்தில் கடித்தது. நாய் பாய்ந்ததால் நிலைதடுமாறி சிறுவன் கீழே விழுந்தான். அப்போது தெரு நாய் சிறுவனின் முகத்தை கடித்து குதறியது.
சிறுவனின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் நாயை விரட்டி சிறுவனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.