பெற்றோர்களே உஷார்!…. சாக்லேட் சாப்பிட்ட சிறுவன்…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. பெரும் சோகம்….!!!!

தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் வசித்து வருபவர் கங்கர்சிங். இவரது மகன் சந்தீப் சிங்(8) அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2ஆம் வகுப்பு பயின்று வந்தார். நகரத்தில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வரக்கூடிய கங்கர்சிங் ஆஸ்திரேலியா சென்று திரும்பியிருந்தார். அப்போது கங்கர்சிங் சாக்லெட் வாங்கி வந்திருந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் சந்தீப் சிங், தன் தந்தை ஆசையாக வாங்கிவந்த சாக்லெட்டை பள்ளிக்கு கொண்டு சென்று சாப்பிட்டுள்ளான்.

இந்நிலையில் சாக்லெட் சிறுவனின் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது. உடனே அச்சிறுவனை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். எனினும் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இவ்வாறு தன் தந்தை ஆசையாக வாங்கி வந்த சாக்லேட் சாப்பிட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.