பெற்றோர்களே!… உங்க பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு சேமிக்கணுமா?…. அப்போ உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க….!!!!

நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்கால நலனுக்காக அரசு பல சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் உத்தரவாதத்துடன்கூடிய இந்த சேமிப்புத் திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்வதன் வாயிலாக உங்களுக்கு நிரந்தரமான வருமானம் கிடைக்கப் பெறும். அரசு வழங்கக்கூடிய சிறப்பான சிறுசேமிப்பு திட்டங்களில் ஒன்று சுகன்யா சம்ரித்தியோஜனா திட்டம் ஆகும். இத்திட்டம் ஒரு பெண் குழந்தையின் எதிர்கால தேவைகளை பூர்த்திசெய்ய விரும்பும் சிறந்த சேமிப்பாகும். இந்த திட்டத்தில் மொத்த வட்டிவிகிதம் 7.6 சதவீதம் ஆக இருக்கிறது. இவற்றில் வட்டிவிகிதம் காலாண்டு அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்படுகிறது.

அத்துடன் இந்த எஸ்எஸ்ஒய் திட்டம் மற்ற சிறுசேமிப்பு திட்டங்களை விட சிறந்த வருமானத்தை அளிக்கிறது மற்றும் பணத்திற்கு ஆபத்து இல்லாதது ஆகும். இத்திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர் (அ) பாதுகாவலர் உதவியதோடு கணக்கை துவங்கலாம். அந்த குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்ததும் அப்பெண் குழந்தை கணக்கை நிர்வகித்துகொள்ளலாம். ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகளுக்கு இக்கணக்கை திறக்கலாம். இந்த கணக்கை நீங்கள் வங்கி (அ) தபால் அலுவலகம் இரண்டிலும் திறந்துக்கொள்ளலாம். அத்துடன் இந்த திட்டத்தில் முதலீட்டு காலம் 15 வருடங்கள் மற்றும் முதிர்வுகாலம் 21 ஆண்டுகளாகும். எஸ்எஸ்ஒய் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூபாய்.250 மற்றும் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் டெபாசிட் செய்யலாம்.

இவற்றில் நீங்கள் கணக்கை சரியாக பராமரிக்கவில்லை எனில் உங்களுக்கு ரூபாய்.50 அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு வருடத்திற்கும் குறைந்தபட்சம் ரூபாய். 250 +ரூ.50 செலுத்தி, கணக்குத் தொடங்கிய நாளில் இருந்து 15 ஆண்டுகள் முடிவதற்குள் தவறிய கணக்கை மீட்டெடுக்கலாம். இத்திட்டத்தில் ரூ.250ல் கணக்கைத் துவங்கி, முதல் மாதம் ரூ.750-ஐ தொடர்ந்து மாதம் ரூ.1,000 டெபாசிட் செய்தால், உங்களது மொத்த டெபாசிட் தொகை ரூபாய்.12,000 ஆக இருக்கும். உங்கள் பெண் குழந்தை பிறந்த பின் இந்த கணக்கை திறந்தால் அந்த பெண்ணின் 21 வயதில் மொத்த முதலீடு ரூ. 1,80,000 ஆக இருக்கும். அத்துடன் வட்டியுடன் சேர்த்து 21 வருடங்களுக்கு பின் முதிர்வுத்தொகை ரூபாய்.5,27,445 ஆக இருக்கும்.