அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இன்று முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை பெற்றோர்கள் கட்டாயம் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி, ஆசிரியர்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்து, வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் மாணவர்களுக்கான திட்டங்கள் குறித்து தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த வருடம் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இரட்டை இலக்கத்திற்கு உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.