பெரும் பரபரப்பு!!…. 55 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளை அபேஸ் செய்த சூப்பர்வைசர்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!!

கோவை சலீவன் தெருவில் தனியாருக்கு சொந்தமான நகைக்கடை ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கு வீர கோளம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ் என்பவர் சூப்பர்வைசராக பணியாற்றி வந்துள்ளார். இவர் நகை கடைக்கு வரும் தங்கக் கட்டிகளை பட்டறைகளுக்கு  அனுப்பி ஆபரணமாக தயாரித்து வாங்கி வருவதை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கின்றார். மேலும் தங்கம் வடிவமைப்பு, தரம், முத்திரை போன்ற பணிகளையும் கவனித்துள்ளார். இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக தங்கக்கட்டி பட்டறை கொடுப்பது போல் கணக்கு காட்டியும் பழுதான தங்க நகைகள்  என திருத்தம் செய்தும் மோசடியில் ஈடுபட தொடங்கியுள்ளார்.

மேலும் போலியாக பதிவேடு தயாரித்து கம்ப்யூட்டர் பதிவுகளை திருத்தம் செய்திருக்கின்றார். சுமார் 1467 கிராம் எடையிலான 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகையை ஜெகதீஷ் மோசடி செய்ததாக கூறப்படுகின்றது. இது குறித்து தகவல் அறிந்து வெரைட்டி ரோடு காவல் நிலையத்தில் நகை கடையின் மேலாளர் சிவகார்த்திகேயன் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் ஜகதீசை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பல்வேறு அதிர்ச்சியுட்டும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஜெகதீஷ் கடந்த சில வருடங்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளார். வேலை செய்யும் போது கூட ஆன்லைன் ரம்மி விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதில் ஆயிர கணக்கான பணத்தை இழந்துள்ளார். மேலும் தன்னிடம் இருந்த பணத்தை முழுவதும் காலியான பின் நகைக்கடையின் தங்கத்தை எடுத்து மோசடி கணக்கு காட்டத் தொடங்கியுள்ளார்.

45 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக இருக்கும் ஒரு பவுன் தங்கத்தை பவுன் 20,000 என தனக்கு தெரிந்தவர்களிடம் விற்பனை செய்து வந்திருக்கின்றார். கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 55 லட்சம் மதிப்பிலான 180 பவுனுக்கும் அதிகமான 37 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். அந்த பணத்தை வைத்து ரம்மி விளையாடி இருக்கின்றார். இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மட்டும் கடந்த சில மாதங்களில் இரண்டு கோடி ரூபாய் வரை பணத்தை வென்றிருக்கின்றார். அதனால் மேலும் பல கோடி சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் ரம்மி ஆடியுள்ளார். இதில் ஜெகதீஷ் மொத்த பணத்தையும் இழந்து விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்த போலீசார் அதில் 98 பைசா மட்டுமே இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இது பற்றி ஜெகதீசிடம் விசாரித்த போது விளையாட்டில் வெற்றி தோல்வி எல்லாம் விளையாட்டில் சாதாரணம் தான். மீண்டும் விளையாடினால் தான் தோற்றுப் பணத்தை எடுக்க முடியும் என கூறியுள்ளார். இதனை அடுத்து ஜெகதீஷ் மீது மோசடி வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் ரம்மியால் பலர் தவறான முடிவுகளை எடுத்து வருகின்றார்கள் சிலர் மோசடி வேலைகளிலும் ஈடுபட்டு இருக்கின்றனர். இதற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *