பெரும் பதற்றம்… 2 வது நாளாக தொடரும் இஸ்ரேல் வான் தாக்குதல்…. பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு….!!!!!!!!!

இஸ்ரேல் ராணுவத்திற்கும் பாலஸ்தீனத்தின் காசா நகரில் உள்ள போராளிகள் குழுவிற்கும் இடையே பல காலமாக மோதல் போக்கு நீடித்து வருகின்றது. இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை காசாநகர் மீது கடுமையான வான்  தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததால் காசநகரில் உள்ள பல கட்டிடங்கள் தரைமட்டம் ஆகியுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் பாலஸ்தீன போராளிகள் குழுவின் தலைவர் தைசிர் அல்ஜபாரி உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே இஸ்ரேல் ராணுவத்தின் வான்தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக பாலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் நகரங்கள் மீது நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று முன்தினம் காசாநகர் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பாலஸ்தீன போராளிகள் குழுவின் மற்றொரு தலைவரான கலித் மன்சூர் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

இதற்கிடையே இஸ்ரேல் ராணுவத்தின் வான்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 200 க்கு அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதாகவும்  பாலஸ்தீன அதிகாரிகள் கூறியுள்ளனர். இதில் உயிரிழந்தவர்களில் 6 சிறுவர்களும் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *