அல்லு அர்ஜுன் ராஷ்மிகா வந்தனா நடிப்பில் இன்று புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. முதல் பாகம் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் இரண்டாவது பாகமும் சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹைதராபாத்தில் புஷ்பா 2 படம் வெளியிட்டு திரையிடலில் அல்லு அர்ஜுன் வந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரைடலை காண நேற்று நடிகர் அல்லு அர்ஜுன் வந்தார்.

அவரை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அப்போது காவலர்கள் தடியடி நடத்திய போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வந்திருந்த ரேவதி என்ற பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.