பெரும் சோகம்…. தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மோதிய லாரி…. 3 பேர் உயிரிழப்பு….!!!!!!!

அரியானாவில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது லாரி மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலத்தில் ஜார்ஜர் மாவட்டத்தில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த கட்டுமான பணிக்காக உத்திர பிரதேசத்தில் இருந்து வந்திருந்த 18 புலம்பெயர் தொழிலாளர்கள் நெடுஞ்சாலையின் ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த அந்த வழியே நிலை தடுமாறி வந்த லாரி ஒன்று தூங்கிக்கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது மோதியது. இதில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர் என மூத்த போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

மேலும் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். குண்ட்லி-மனேசர்-பல்வால் விரைவு சாலையில் ஆசோதா  சுங்கச் சாவடியில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அதிகாலையில் இந்த சம்பவம் நடைபெற்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த நிலையில் தொழிலாளர்கள் அந்த வழியாக செல்லும் வாகனங்களை எச்சரிக்கும் விதமாக தடுப்பு சுவர்களை அமைத்தும், ஒளி பிரதிபலிப்பான்களை பொருத்தியும் தங்கள் பாதுகாப்பினை உறுதிபடுத்தி இருக்கின்றனர்.

ஆனால் அவ்வாறு இருந்த போதிலும் இந்த விபத்து ஓட்டுநர் குடிபோதையில் அல்லது தூக்க கலக்கத்தில் இருந்த போது கட்டுப்பாட்டை இழந்து நடைபெற்று இருக்கலாம் என போலீசார்  தெரிவித்திருக்கின்றனர். மேலும் லாரி பதிவு எண்ணை பயன்படுத்தி உரிமையாளரை கண்டுபிடித்த  போலீசார்,  அவரிடம் இந்த சம்பவம் பற்றியும் ஓட்டுனர் பற்றியும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *