சின்னத்திரையில் பல ஆண்டுகளாக நடிகராக இருப்பவர் நேத்ரன். இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களிலும், துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மருதாணி சீரியல் மூலம் நேத்ரன் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு சூப்பர் குடும்பம், முள்ளும் மலரும், வள்ளி, சசி லீலாவதி, உறவுகள் சங்கமம், பாவம் கணேசன் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். சக நடிகையான தீபா என்பவரை நேத்ரன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேத்திரனும் தீபாவும் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேத்திரனுக்கு புற்றுநோய் இருப்பது உறுதியானது. அவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். நேற்று இரவு நேத்ரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.