பெரும் சோகம்… “இப்படி ஒரு நோயா”… காற்று கூட படக்கூடாது…. மரண வேதனையை அனுபவிக்கும் பெண்..!!!!!!!

அமெரிக்காவில் மிக கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்று கடித்ததால் மரண வேதனையை அனுபவிக்கும் அளவிற்கு ஒரு பெண் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்.

உலகின் மிக கொடிய விஷமுள்ள பாம்புகளில் ஒன்று கடித்தால், அமெரிக்க பெண் ஒருவர் “உலகின் மிகவும் வேதனையான கோளாறு” என்று சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர். நியூஸ் வீக்கின் படி, டெக்சாஸைச் சேர்ந்த  ரேச்சல் மைரிக் (Rachel Myrick). இவர்  கடந்த 2017-ஆம் ஆண்டில் ஸ்பாட்சில்வேனியா கவுண்டியில் உள்ள லாங்ஹார்ன் ஸ்டீக்ஹவுஸில் நுழைந்தபோது, அங்கிருந்த ​​எட்டு அங்குல செப்புத் தலைப் பாம்பு ஓன்று கடித்துள்ளது.

உணவகத்தின் நுழைவாயிலுக்குள் நுழைந்த பாம்பு அவரது கால்விரல்களில் இரண்டு முறையும், அவரது பாதத்தின் பக்கவாட்டில் ஒரு முறையும் கடித்துள்ளது. அப்போது, பாம்பு  ​​கடித்து  கடுமையான வலி ஏற்பட்டதால், அவரது கையில் இருந்த  செல்போன் மற்றும் பணப்பை கீழே விழுந்தன. இந்நிலையில் அவரது கால் மற்றும் கணுக்கால் வீங்கியதால், மேரிலாண்ட் வாஷிங்டன் மருத்துவமனையில் ஆன்டி-வெனம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும், பாம்பு கடி அல்லது விஷ எதிர்ப்பு, அல்லது இரண்டும் கலந்து complex regional pain syndrome எனும் சிக்கலான வலி நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை லேசாகத் தொட்டால் கூட வலியை ஏற்படுத்தும், அதாவது ஒரு மெல்லிய தூரிகை (soft Brush) அல்லது ஒரு லேசான காற்று கூட அவரது தோல் மீது பட்டால் பெரும் வலியை ஏற்படுத்தும்.

தனது வேதனை குறித்து விவரித்த Myrick, ஒருவர் தனது முழு வாழ்நாளில் அனுபவிக்கக்கூடிய வலியின் 10 மடங்கு வலியை ஒரே நேரத்தில் அனுபவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே வெயிலில் எரிந்ததைப் போல் உணரும் தோல் மீது மணல் அல்லது கண்ணாடித் துண்டுகளை கொட்டி தேய்த்தால் எப்படி இருக்குமோ அதைப்போல் இருப்பதாக விவரித்துள்ளார். நரம்பியல் கோளாறுகள் மற்றும் பக்கவாதத்திற்கான தேசிய நிறுவனம் (NIH) படி, CRPS இன் அறிகுறிகளில் தோல் நிற மாற்றம், வெப்பம் அல்லது காயம் ஏற்பட்ட இடத்திற்கு கீழே கை அல்லது காலில் வீக்கம் ஆகியவை அடங்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் பெரும்பாலான CRPS காயங்கள் மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்பும் நரம்பு இழைகளின் முறையற்ற செயல்பாட்டினால் ஏற்படுவதாக NIH தெரிவிக்கிறது. பல்வேறு அறிகுறிகள் காரணமாக CRPS-க்கு சிகிச்சையளிப்பது கடினமாக இருக்கலாம், மற்றும் காலப்போக்கில் அவை மாறலாம் என்று கூறப்படுகிறது. இதன் பொருள் தற்போது CRPS-ஐ விரைவாக குணப்படுத்த வழி இல்லை என்பது தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *