தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக புகைப்பட ஆதாரத்துடன் பெற்றோர்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.
அதாவது அய்யம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது பெற்றோர் புகார் மனு கொடுத்த நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டிய சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.