தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வில் தேர்வர்களின் பதிவெண் மாறியதால் குளறுபடி ஏற்பட்டு தேர்வு தாமதமாக தொடங்கப்பட்டது. தேர்வு தாமதமாக தொடங்கப்பட்டதால் இன்று நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வு ரத்து செய்துவிட்டு வேறொரு நாளில் வைக்க வேண்டும் தேர்வை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ தேர்வில் ஏராளமான குளறுபடிகளுடன் தாமதமாக தொடங்கியது. பல தேர்வு மையங்களில் வினா தாள்களில் பதிவு எண்கள் மாறி இருந்தது தான் இந்த குழப்பத்திற்கு காரணம். பல இடங்களில் தேர்வர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு அவற்றின் பதிவு எண்கள் தவறாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பின் அவர்களிடம் இருந்து வினாத்தாள்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இதன்மூலம் பல இடங்களில் வினாத்தாள்கள் வெளியாகிவிட்டது. இதற்கு டிஎன்பிஎஸ்சி-யின் அலட்சியம் மட்டும் தான் காரணம். போட்டி தேர்வுகளில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தேர்வர்களுக்கு மன உளைச்சல் மற்றும் பதற்றம் இல்லாத சூழல் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் இன்றைய தேர்வில் சமவாய்ப்பும் இல்லை. தேர்வர்களுக்கு மன உளைச்சல் இல்லாத சூழலும் இல்லை. எனவே இந்த தேர்வில் சம நீதி என்பது கிடைக்காது. எனவே இன்றைய தேர்வு உடனடியாக ரத்து செய்து அனைத்து குளறுபடிகளையும் களைந்து விட்டு வேறொரு நாளில் அமைதியான சூழலில் இந்த தேர்வை நடத்த வேண்டும் என நான் டிஎன்பிஎஸ்சி இடம் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. தொகுதி இரண்டுக்கான முதன்மை தேர்வு ஏராளமான குளறுபடிகளுடன் மிகவும் தாமதமாக தொடங்கியுள்ளது. பல தேர்வு மையங்களில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததுதான் இக்குழப்பத்திற்கும் தாமதத்திற்கும் காரணமாகும். (1/4)#GroupIIMains #TNPSC
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) February 25, 2023