நடிகர் அஜித், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்த துணிவு படம் வருகிற 11-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் தமிழகத்தில் மட்டும் 500 தியேட்டர்களில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் துணிவு படம் குறித்து கூறியதாவது, துணிவு படத்திற்கு பெரிய அளவில் விளம்பரம் செய்யவில்லை.

அதற்கு காரணம் அதிகப்படியான விளம்பரம் ரசிகர்களிடையே படம் குறித்து பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விடும். இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய கற்பனைகளுடன் தியேட்டருக்கு வருகின்றனர். அப்படி ஒரு தவறை செய்யக்கூடாது என்பதற்காக துணிவு படத்திற்கு பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யவில்லை. இதனால் பெரிய அளவு எதிர்பார்ப்புகள் இல்லாமல் தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு இந்த படம் 100% திருப்தியை அளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.