பெரம்பலூரில் ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பு… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூரில் ஒரே நாளில் புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா பரவிக் கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதன் காரணமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் 2,321 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கனவே 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்ற 2,681 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் தற்போது 19 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மருத்துவ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.