பென்ஸ் நிறுவனத்தின் CEO-வோ ஆட்டோவில் சென்றாரா…..? இவருக்கு இந்த நிலைமையா…. காரணம் என்ன தெரியுமா?…!!!!

இந்தியாவில் உள்ள பல முக்கிய நகரங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியுடன் சேர்த்து நாளுக்கு நாள் கார்கள் போன்ற வாகனங்களை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பல முக்கிய நகரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்படி ஒரு சம்பவம் தான் பென்ஸ் நிறுவனத்தின் சிஇஓ மெர்சிடீஸ் பென்சுக்கு நடந்துள்ளது. இந்த சம்பவத்தை மெர்சிடீஸ் பென்ஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இவர் புனேவில் தன்னுடைய சொகுசு காரான S-கிளாஸ் பென்ஸ் காரில் சென்று கொண்டிருந்தார்.‌ இவர்‌ போக்குவரத்து நெரிசலில் நீண்ட நேரமாக மாட்டிக் கொண்டதால் தன்னுடைய சொகுசு காரை சாலையில் ஓரமாக நிறுத்திவிட்டு சிலர் கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளார். அதன் பிறகு பென்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஒரு ஆட்டோவில் ஏறி தான் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றுள்ளார். மேலும் பென்ஸ் நிறுவனத்தின் சிஇஓவின் இன்ஸ்டாகவலை பார்த்தவர்கள் பென்ஸ் நிறுவனத்தின் சிஇஓ-கே இந்த நிலைமையா என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இருப்பினும் ஒரு பெரிய நிறுவனத்தின் CEO ஆட்டோவில் சென்றதை பலரும் பாராட்டுகின்றனர்.