பெண் youtube-ருக்கு பாலியல் தொல்லை…. இந்திய இளைஞர்கள் செய்த தரமான சம்பவம்…. நெகிழ்ச்சி பதிவு….!!!!!

தென் கொரியா நாட்டில்  ஹயோஜியோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இரவு 11:30 மணி அளவில் பெண் youtube ஒருவர் வீடியோ எடுத்து அதை லைவில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் அந்த பெண் யூட்யூபருக்கு பாலியல் தொல்லை கொடுக்க, அந்த பெண் அங்கிருந்து நைசாக நழுவி செல்கிறார். இந்த சம்பவம் லைவில் வெளியானதால் போலீசார் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்து பாலியல் தொல்லை கொடுத்த மொபின் சந்த் முகமது மற்றும் முகமது நக்யூப் அன்சாரி என்ற 2 வாலிபர்களை கைது செய்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் வாலிபர்கள் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த போது இந்திய நாட்டைச் சேர்ந்த ஆதித்யா மற்றும் அதர்வா என்ற வாலிபர்கள் தன்னை காப்பாற்றியதாக கூறி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.‌ மேலும் அந்தப் பெண் யூடியூபர் இந்திய வாலிபர்கள் இரண்டு பேருக்கும் மதிய விருந்து கொடுத்ததோடு அவர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்த புகைப்படத்தையும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.