மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தைக்கு 3 முறை ஆயுள் தண்டனையும் அவருக்கு ஆதரவாக இருந்த சிறுமியின் தாயாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2021 ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி அன்று சிறுமியின் தாய் அவரை திட்டியதால் அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதையடுத்து அவரது தாயார் சிறுமி பாட்டி வீட்டிற்கு போயிருப்பதாக நினைத்திருந்தார். ஆனால் 4 மாதங்களாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை.

இதனால் சிறுமியின் தாயார் உறவினர்களிடம் விசாரித்ததில் அவரை பற்றி எந்த ஒரு தகவல்களும் அவருக்கு கிடைக்கவில்லை. பின்னர் அவரது தாயார் காவல்துறையினரிடம் தன்னுடைய மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிறுமியை தேடியதில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் பலத்திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. இதில் சிறுமியின் வளர்ப்பு தந்தை அவரை 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது.

இதைப் பற்றி தனது தாயிடம் கூறிய போது தன்னை திட்டியதாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் மற்றும் வளர்ப்பு தந்தை காவல்துறையினர் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது வழக்கின் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன.

இதில் வளர்ப்பு தந்தை 3 முறை ஆயுள் தண்டனையும் தாயாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.