பெண் நீதிபதிக்கு எதிரான சர்ச்சை பேச்சு… “பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட் உத்தரவு பிறப்பிப்பு”…!!!!

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ- இன்சாப் கட்சியின் தலைவர் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற பேரணி ஒன்றில் கடந்த வருடம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஆவேசத்துடன் பேசியுள்ளார். அதில் அவர் பேசும்போது அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஷபாஷ் கில்லை துன்புறுத்தியதற்காக நகர ஐஜி துணை ஐஜி மற்றும் பெண் மாஜிஸ்திரேட் ஆகிய ஒருவரையும் விடமாட்டேன் என அவர்களுக்கு எதிராக வழக்குகளை பதிவு செய்வேன் என எச்சரிக்கை விடும் விதமாக பேசிள்ளார். இதன்பின் பொது பேரணியில் பேசும்போது வரம்பு மீறி பேசி விட்டேன் என்று அதனை உணர்ந்துவிட்டேன் எனவும் கூறி இம்ரான் கான் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கின்றார்.

இந்த சூழலில் வருங்காலத்தில் எந்த ஒரு கோர்ட் மற்றும் விதிமுறைகளின் கண்ணியம் புண்படும் விகிதமாக நடந்து கொள்ள மாட்டேன் எனவும் இம்ரான் கண் உறுதி அளித்துள்ளார். இருப்பினும் பெண் நீதிபதி ஒருவருக்கு எதிராக சர்ச்சையாக பேசியதுக்காக இம்ரான் கானுக்கு எதிராக இஸ்லாமாபாத் மாஜிஸ்திரேட் கைது பிறப்பித்து உத்தரவிட்டிருக்கிறார். மேலும் கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதியான ஜூபா சவுத்ரிக்கு மிரட்டல் விடுத்ததற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது இதன்படி நான்கு பிரிவுகளின் கீழ் அவர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.