பெங்களூரில் உள்ள ஜெயதேவா மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிபவர் யல்லலிங்க. வார்டு உதவியாளரான இவர் தனது ஸ்மார்ட் போனை பெண்கள் கழிப்பறைக்குள் மறைத்து வைத்து காணொளி பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் மருத்துவமனையை சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர் கழிப்பறையை பயன்படுத்துவதற்காக சென்றபோது ஜன்னலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஸ்மார்ட் ஃபோனை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதனை எடுத்து ஆன் செய்தபோது அதில் அவருடைய வீடியோவும் இருந்துள்ளது.

இது குறித்து அவர் புகார் அளித்த நிலையில் அந்த ஸ்மார்ட்போன் யல்லலிங்காவுடையது என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் விசாரித்த போது முதலில் தான் ஏதோ அவசரத்தில் ஸ்மார்ட்போனை கழிப்பறையில் வைத்து விட்டதாக கூறியுள்ளார்.

பின்னர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். ஆனால் அதன் பிறகு அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.