பெண்ணின் வலையில் சிக்கி… ராணுவ ரகசியத்தை கூறிய சிப்பாய்… இந்திய ராணுவம் அதிரடி…!!!

இந்திய ராணுவம் பற்றிய ரகசிய தகவலை பாகிஸ்தானுக்கு கூறிய சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தானில் உள்ள சிகார் மாவட்டத்தில் ஆகாஷ் மஹாரியா (22)என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவத்தில் சிப்பாயாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் honey-trap எனப்படும் சமூக ஊடகங்கள் மூலம் பாகிஸ்தானில்உள்ள பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் இந்திய ராணுவத்தில் பணி புரிபவர்களிடம் இருந்து தகவல்களை திரட்ட பாகிஸ்தானின் ராணுவம் பெண்கள் பெயரில் சமூக ஊடகங்களில் கணக்கு வைத்துள்ளார்கள்.அதனால்  இதை அறியாத ஆகாஷ் அந்தப் பெண்ணின் வலையில் சிக்கி இந்திய ராணுவத்தின் ரகசியங்களை தெரிவித்துள்ளார்.

மேலும் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டு ரகசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட காரணத்தினால் மஹாரியாவை உடனே கைது செய்ய உளவுத்துறையின் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் கடந்த சனிக்கிழமை இரவு அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் தனது மொபைல் மூலம் இந்திய ராணுவம் குறித்து மூலோபாய தகவல்கள் வழங்குவதில் ஈடுபட்டு உள்ளார் என்றும் அவர் பாகிஸ்தான் பெண் முகவர்கள் உடன் வெளிப்படையான உரையாடல்களை இயல்பாக பேசியுள்ளார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் பாகிஸ்தான் உளவுத்துறை சமூக ஊடகங்களில் போலியான அடையாளங்களைக் கொண்டு பேஸ்புக்கில் அவருடன் பாக்கிஸ்தான் முகவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். இதனால் ராணுவத்தில் பணிபுரியும் முகவருடன் தொடர்பு கொண்டு ரகசியங்களை சாமர்த்தியமாக கறந்து விடுவார்கள்.  இதனை அறியாமல் தான் ரகசியத்தை சொல்லி விட்டதாகவும் போலீஸ் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *