பெண்களை பற்றி பேச பாஜகவுக்கு என்ன அருகதை இருக்கு?… ப. சிதம்பரம் கடும் விமர்சனம்…!!!

பெண்களைப் பற்றி பேச அருகதை இல்லாத கட்சி பாஜக என்ற முன்னாள் மத்திய நிதியமைச்சர் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அதுமட்டுமன்றி ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் போட்டியிடும் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்களை நேரில் சந்தித்து ஓட்டு சேகரிக்கும் பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பெண்களைப் பற்றி பேச அருகதை இல்லாத கட்சி பாஜக என்ற முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்தம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பிரதமரிடம் முதல்வர் ஈபிஎஸ் கேட்டிருக்க வேண்டும். அடிமை சாசனம் எழுதித் தந்தால் மத்திய அரசை, பிரதமரை அதிமுகவினர் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.