பெண்களை இழிவுபடுத்துவது தான் திமுக – காங்கிரஸ் கலாச்சாரம்… பிரதமர் மோடி…!!!

தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கலாச்சாரம் என்பதே பெண்களை இழிவுபடுத்துவது தான் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக ஒவ்வொரு கட்சியினரும் வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்றார். அதில் பேசிய அவர், “தற்போது திமுக மற்றும் காங்கிரஸ் ஒரு முக்கியமான ஏவுகணை பயன்படுத்த ஆரம்பித்து இருக்கிறது. தமிழகத்தில் பெண்களை இழிவுபடுத்துவதே திமுக காங்கிரசில் அந்த முக்கிய ஏவுகணையாக உள்ளது. அவர்களுக்கு பெண்களை இழிவுபடுத்துவது முக்கியமான நோக்கம்.

நான் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒன்று சொல்கிறேன். நீங்கள் உங்கள் கட்சித் தலைவர்களை கட்டுப்படுத்துங்கள். இது எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது போன்ற செயலை அவர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். தமிழக முதல்வர் பழனிசாமி யின் தாயார் குறித்து திமுக தலைவர்கள் நினைவுபடுத்தியது கண்டிக்கத்தக்கது” என்று அவர் கூறியுள்ளார்.