பெண்களே… எந்தப் பக்கம் மூக்கு குத்தினால் ரொம்ப நல்லது…? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…!!!

பெண்கள் என்றாலே அழகுதான். அவர்கள் தங்களை மேலும் அழகாக்கிக் கொள்வதற்கு உடலில் தங்க நகைகள் அணிகின்றனர். அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை அனைத்து பெண்களும் காது குத்துவது என்பது இயல்பு. ஆனால் மூக்கு குத்துவது வழக்கம் நாளடைவில் குறைந்து கொண்டு வருகின்றது. அப்படி மூக்கு குத்துவது என்றாலும் எந்த பக்கம் மூக்கு குத்துவது இடதா? வலதா? என்கிற குழப்பம் வருகின்றது. மூக்கு குத்துவது இந்தியர்களின் தொண்டு தொற்ற வழக்கமாகும். திருமணமான பெண்கள் திருமணத்திற்கு முன்பாக மூக்கு குத்துவார்கள். வட இந்திய பெண்கள் மூக்கின் இடதுப் பக்கத்திலும், தென்னிந்திய பெண்கள் மூக்கின் வலப்பக்கத்திலும் மூக்கு குத்துவார்கள்.

இடது பக்கம் குத்துவதால் ஏற்படும் நன்மைகள்:

மூக்கு குத்துவதற்கு சிறந்த பக்கம் என்றால் அது இடது பக்கம் தான். ஏனெனில் பெண்களின் இனப்பெருக்க உறுப்பு மூக்கின் இடது பக்கதோடு தொடர்புடையதாக ஆயுர்வேதம் தெரிவிக்கின்றது. இதனால் பிரசவ வலி ஏற்படும் பொழுது வலி குறைந்து எளிதாக குழந்தை பிறக்கும் என்பது அவர்களின் கூற்று. அதோடு மட்டுமல்லாமல் மாதவிடாய் பிரச்சினைகள் தீரும்.

வலது பக்கம் குத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:

மேற்கத்திய கலாச்சாரத்தின் படி ஆண்கள் இடது பக்கத்திலும், பெண்கள் வலது பக்கத்திலும் மூக்கு குத்துவார்கள். பெண்கள் பொதுவாக இடது பக்கம் படுப்பது நல்லது. இடது பக்கம் மூக்கு குத்தும் பொழுது அவர்கள் சாதாரணமாக படுக்க முடியாது. இதன் காரணமாக மேற்கத்திய பெண்கள் வலது பக்கத்தில் குத்து மூக்கு குத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *