பெண்களுக்கு மாதம் 1,000 எப்போது….? சபாநாயகர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் பெண்களுக்கு வழங்குவதாக அறிவித்த மாத உரிமைத் தொகையை, அடுத்த ஆண்டு நிச்சயம் CM வழங்குவார் என சபாநாயகர் அப்பாவு உறுதி தெரிவித்துள்ளார். இதுபற்றி கூட்டம் ஒன்றில் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் கஜானாவில் ஒன்றும் இல்லை. பல லட்சம் கோடி கடன் மட்டுமே உள்ளது. எனினும் புதுமைப் பெண் திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் படித்து பட்டப்படிப்பு படிக்கும் பெண்களுக்கு CM மாதம் ரூ1,000 வழங்குகிறார் என்றார்.