நடிகை காயத்ரி ரகுராம், பா.ஜ.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தது இன்றுதான் என்றாலும், இவரை கட்சி பொறுப்பிலிருந்து ஏற்கனவே அண்ணாமலை நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். பா.ஜ.க-வில் அண்ணாமலை வந்த பிறகு விஷயங்கள் கைமீறி போய் விட்டது எனவும் அவர் தலைமை பொறுப்பில் இருக்கும்போது பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக சமூகஊடகங்களில் சில நாட்களாக நேரடி தாக்குதலில் காயத்ரி ரகுராம் இறங்கியிருந்தார்.

திருச்சி சூர்யா கொச்சையாக பேசியதற்கும், அண்ணாமலை பேசியதற்கும் வித்தியாசம் கிடையாது என பா.ஜ.க-வில் நடக்கும் உட்கட்சி மோதல்களை காயத்ரி ரகுராம் அம்பலப்படுத்தி இருக்கிறார். இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க இருக்கிறேன் என்றும் காயத்ரி ரகுராம் டுவிட் செய்துள்ளார்.