பெண்கள் தொழில் தொடங்குவதற்கு வசதியாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் உணவு கேட்டரிங் தொழிலைத் தொடங்க விரும்பும் பெண்களுக்காக 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி அன்னபூர்ணா யோஜனா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தின் மூலம் ரூ.50,000 கடன் வழங்கப்படுகிறது. சமையல் உபகரணங்கள், குளிர்சாதனப்பெட்டி, எரிவாயு இணைப்பு மற்றும் சாப்பாட்டு மேசைகள் வாங்க இவற்றைப் பயன்படுத்தலாம். இந்தக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் சந்தையைப் பொறுத்து மாறுபடும். கடனை மூன்று ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். எந்தவொரு எஸ்பிஐ கிளையையும் தொடர்பு கொண்டு பெண்கள் இந்தக் கடனைப் பெறலாம்.