பெட்ரோல் டீசல் விலை ரூ.50 ஆக குறைய வேண்டுமா…? சூப்பர் ஐடியா நான் சொல்றேன்… சிவசேனா எம்பி சஞ்சய்ராம் கருத்து..!!!

மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை 5 ரூபாயும், டீசல் மீதான வரியை 10 ரூபாயும் குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு வரியை குறைத்தது, மட்டுமல்லாமல் மாநில அரசுகளும் எரிபொருள் மீதான வாட் வரியை குறைத்து நுகர்வோருக்கு ஏற்படும் சுமையை குறைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளது. புதுச்சேரி அரசும் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்து உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பாஜக ஆளும் மாநிலங்கள் ஆதரவு தெரிவித்தாலும், சில கட்சியினர் இடைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியினாளும் வரப்போகும் தேர்தலில் மக்களை கவர வேண்டும் என்பதற்காகவும் இதுபோன்று பாஜக செய்துவருவதாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சிவசேனா எம்பி சஞ்சய் பெட்ரோல் டீசல் விலை ரூபாய் 50 ஆக குறைக்க வேண்டும் என்றால், பாஜகவை வரும் தேர்தலில் முழுமையாக தோற்கடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்ததை அடுத்து இந்த விலை குறைந்துள்ளது எனவும், இந்த ரூபாய் 5 விலை குறைப்பு எதிர்க்கும் உதவப்போவதில்லை. குறைந்தபட்சம் 25 குறைக்கப்பட்டு இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *