பெட்ரோல், டீசல் விலை இனி – மத்திய அரசு தடாலடி அறிவிப்பு…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சில தினங்களாக பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ.92.58க்கும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.85.88க்கும் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை வரும் நாட்களில் மேலும் குறையும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக கிடைக்கும் பயனை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கச் செய்வோம் என நாங்கள் ஏற்கனவே தெரிவித்தது போல விலை குறையும் என்று கூறியுள்ளார்.