பெட்ரோல் இல்லாம நின்னுருச்சா….? தீக்குச்சியை வைத்து பார்த்த நபர்…. பின் நடந்த விபரீதம்…!!

ஸ்கூட்டரில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தெக்கூர் பகுதியில் தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தியாகராஜன் தனது ஸ்கூட்டரில் நாட்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஸ்கூட்டர் நின்றதால் வாகனத்தில் பெட்ரோல் உள்ளதா என தியாகராஜன் தீக்குச்சியை கொளுத்தி பார்த்துள்ளார்.

இதனால் பெட்ரோலில் தீப்பிடித்து ஸ்கூட்டர் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்கூட்டரில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் ஸ்கூட்டர் முற்றிலுமாக எரிந்து நாசமாகி விட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *