பெஞ்சல் புயல் பாதிப்பால் தமிழ்நாட்டின் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உட்பட ஏழு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு, ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் சேதம், மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மக்கள் வீடுகளில் இருந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எனவே மீட்பு, நிவாரண பணிகளை விரைவுப்படுத்த, புயல் வெள்ள பாதிப்புகளை ஆராய ஆய்வுக்குழுவை உடனடியாக அனுப்ப, தேவையான நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க, விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கிட ஒன்றிய உள்துறை அமைச்சரை வலியுறுத்துகிறேன் என மாநிலங்களவையில் எம்பி வைகோ பேசியுள்ளார்.