பெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் பெஞ்சல் புயல் பாதித்த ஆறு மாவட்டங்களில் சிறு வணிகர்களுக்கு சிறப்பு சிறு வணிக கடன் திட்டத்திற்கான முகாம் நாளை டிசம்பர் 6-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கடன் முகாம் நடைபெறும் என கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார்.