பூஸ்டர் தடுப்பூசி அவசியமா? வல்லுநர் குழு ஆலோசனை….!!!!

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருவதால் பூஸ்டர் தடுப்பூசி அவசியமா என்பது குறித்து வல்லுநர்கள் குழு ஆலோசனை நடத்த உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கோவிஷுல்டு கோவாக்சீன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. கொரோனாவை எதிர்த்து போராட 2 தவனை போதுமானது என்று வல்லுனர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் 2-ஆவது அலையில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டதால், பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளன.

ஆனால் இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி மற்றும் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதன் வீரியம் அதிகமாக இருப்பதால் பூஸ்டர் தடுப்பூசி அவசியம் தேவை என கருதப்படுகிறது. இந்த நிலையில், பூஸ்டர் தடுப்பூசி மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி அவசியம்தானா என்பது குறித்து வல்லுனர் குழு இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *