பூத் கமிட்டி முறைகேடு… அர்ஜுன மூர்த்திக்கு ரஜினி உத்தரவு…!!!

தமிழகத்தில் தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பரபரப்பு  புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பூத் கமிட்டி அமைப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து, ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் மீது உள்ள புகார்களில் உள்ள உண்மை தன்மையை கண்டறிய அர்ஜுன மூர்த்தி மற்றும் தமிழருவி மணியனுக்கு நடிகர் ரஜினி அறிவுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் நடந்த மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில், அதிருப்தி தெரிவித்த ரஜினி, பதவிக்காக பணம் பெற்றால் கட்சியிலிருந்து நீக்கம் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.