பூட்டி கிடந்த வீட்டிற்குள்…. மூதாட்டிக்கு நடந்த கொடூரம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மர்ம நபர்கள் மூதாட்டியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேனலை கிராமத்தில் ருக்கு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் ரவி குமார் என்பவர் கோவையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரவிக்குமார் தனது தாயை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது மூதாட்டி செல்போனை எடுக்கவில்லை. அதன் பின் ரவிக்குமார் அறிவுரைப்படி அக்கம் பக்கத்தினர் ருக்கு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது மூதாட்டி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.

அதாவது மர்ம நபர்கள் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். இதனை தடுத்ததால் கோபமடைந்த மர்ம நபர்கள் மூதாட்டியை சரமாரியாக தாக்கி விட்டு சென்றுள்ளனர். இதனால் படுகாயமடைந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *