பூட்டிட்டு போனாலும் இப்படி செஞ்சிருக்காங்க…. அலுவலக உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் மர்ம நபர்கள் அலுவலகத்தில் பூட்டிய கதவை உடைத்து 3,60,000 ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மீனாம்பாள்புரம் பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கராயர் பகுதியில் பத்திரம் முடித்துக் கொடுக்கும் அலுவலகத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சிவகுமார் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அலுவலகத்தில் பூட்டிய கதவை உடைத்து உள்ளே இருந்த 3,60,000 ரூபாயை திருடி சென்றனர்.

அதன்பின் வழக்கம்போல் அலுவலகத்திற்கு வந்த சிவகுமார் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.