பூச்சி கடித்து விட்டால் பயப்படாதீங்க….” உங்க வீட்ல இருக்க இந்த பொருளை வச்சு ஈஸியா சரி பண்ணிடலாம்”…!!

சின்ன சின்ன பூச்சிக்கடிகளை நாம் பெரிதாக கண்டு கொள்ள மாட்டோம். அதை அப்படியே விட்டுவிடுவோம். அது பின்னாளில் நமக்கு சரும அலர்ஜி போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே பூச்சி கடித்த உடன் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.

சிறிய பூச்சிகள் கூட நிறைய நச்சுத் தன்மையைக் கொண்டிருக்கும். எனவே பூச்சிக்கடி நீங்கள் அசால்டாக விடாமல் சரி பார்ப்பது மிகவும் நல்லது.

சிறிய சிறிய பூச்சிகள் கடித்த இடத்தில் இருபது நிமிடங்களுக்குள் ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுங்கள். அந்த பகுதியை உணர்வு இல்லாமல் ஆக்கி வீக்கத்தை குறைக்கும்.

பப்பாளி பழத்தில் உள்ள நொதிகள் பூச்சிக் கடியால் ஏற்படும் விஷத்தை முறிக்கக் கூடியது. இந்த பழத்தை துண்டுகளாக வெட்டி பூச்சி கடித்த இடத்தில் வையுங்கள்.

காய்கறிகளில் என்சைம் அதிக அளவு காணப்படுவது வெங்காயம். வெங்காயத்தை வெட்டி பூச்சி கடித்த இடத்தில் வைத்தால் அரிப்பு குறையும்.

துளசி இலைகளை எடுத்து அதனை நசுக்கி அதன் சாற்றை காயத்தின் மீது விடுங்கள். அவ்வாறு செய்வதன் மூலம் அரிப்பு அடங்கும்.

புதினா இலைகளையும் நசுக்கி பூச்சிக்கடி ஏற்பட்ட இடத்தில் 15 நிமிடம் வைத்தால் நன்மை கிடைக்கும்.

தேயிலை குளிர்ச்சி தன்மையை போகக்கூடியது. தேயிலையில் உள்ள வீக்கத்தை குறைக்கும்.

​டூத்பேஸ்ட்  பயன்படுத்தலாம். பூச்சிக்கடி உள்ள இடத்தில் வைத்தால் நிவாரணமளிக்கும்.

கற்றாழையை ஆன்டி-செப்டிக் தன்மை கொண்டது. பூச்சி கடிக்கு சிறந்த நிவாரணம் அளிக்கக் கூடியது. கற்றாழை ஜெல்லை காயம் உள்ள இடத்தில் வைத்தால் வேதனை குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *