
கேரள மாநிலத்தில் ஜெஸ்வின் (26) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த சிறுமியை ஆசை வார்த்தை பேசி தனியாக அழைத்துச் சென்று வாலிபர் பலாத்காரம் செய்த நிலையில் நடந்த சம்பவங்கள் குறித்து சிறுமி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டத்தில் ஒரு பூங்காவில் வைத்து கற்பழித்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்த நிலையில் பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு சிறுமி உட்படுத்தப்பட்டாள். அப்போது சிறுமி 6 வார கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் சிறுமியின் எதிர்காலம் கருதி கர்ப்பத்தை கலைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால் கர்ப்பம் கலைக்கப்பட்டது. அந்த மாதிரியை சேர்த்து வைத்து வாலிபரிடம் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.