புளூ சட்டை மாறனின் ‘ஆன்ட்டி இந்தியன்’… டிரைலர் ரிலீஸ்…!!!

புளூ சட்டை மாறன் இயக்கி, நடித்துள்ள ஆன்ட்டி இந்தியன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது .

யூடியூபில் திரைப்படங்களை விமர்சனம் செய்து பிரபலமடைந்தவர் புளூ சட்டை மாறன் . தற்போது இவர் ‘ஆன்ட்டி இந்தியன்’ என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார் . இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆன்ட்டி இந்தியன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதில் பிரபலம் ஒருவர் மரணமடைந்து விடுகிறார். இதையடுத்து ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத தலைவர்கள் தங்களது மத வழக்கப்படி தான் அவரை அடக்கம் செய்ய வேண்டுமென வாக்குவாதம் செய்கின்றனர். இதைத் தொடர்ந்து இது போலீஸ் மற்றும் அரசியல் பிரச்சினையாகிறது.

இந்த பிரச்சனைக்கு எப்படி தீர்வு காணப்படுகிறது என்பது தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்ட்டி இந்தியன் டிரைலரில் புளூ சட்டை மாறன் இறந்தவராக நடித்துள்ளார். ஒரு ஷாட்டில் கூட அவர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டிரைலரில் ‘மதத்தை நம்புறவன் கோபிச்சுக்க மாட்டான், மதத்தை நம்பி பிழைப்பு நடத்துறான் பாரு அவன்தான் கோபிச்சுப்பான்’, ‘அவரு 25 வருசமா இதோ வரேன், அதோ வரேன்னு சொல்லி அவரு ரசிகர்களேயே ஏமாத்திகிட்டு இருக்காரு’ என்பது போன்ற பஞ்ச் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *