புல் அறுப்பதற்காக சென்ற தொழிலாளி…. உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கட்டிட தொழிலாளி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புதூரில் கட்டிட தொழிலாளியான ஆண்டனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தான் வளர்க்கும் முயல்களுக்கு புல் அறுப்பதற்காக ஆண்டனி வீட்டிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

அப்போது கால்வாய் அருகில் ஆண்டனியின் சைக்கிள் நின்றுள்ளது. அதன்பின் கால்வாய்க்குள் பார்த்தபோது அண்டனி சடலமாக கிடந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆண்டனியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆண்டனி இறந்தது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *