புல்வெளிக்கு நடுவே போஸ் கொடுத்த பிக்பாஸ் நடிகை… வெளியான புகைப்படம்…!!!

பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண்தேவதை, டம்மி பட்டாசு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் குக் வித் கோமாளி முதல் சீஸனில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார் . இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்டு அதிக அளவு பிரபலமடைந்தார்.

இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை சென்ற ரம்யா பாண்டியன் நான்காவது இடத்தை பிடித்தார். தற்போது இவர் நடிகர் சூர்யா தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் புல்வெளிக்கு நடுவே போஸ் கொடுத்த அழகிய புகைப்படத்தை ரம்யா பாண்டியன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களை கவர்ந்த இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .