புல்லாவெளியின் நீர்வீழ்ச்சியில் வாலிபர் அடித்து செல்லப்பட்டாரா…..? தேடும் பணிகள் தீவிரம்….!!!!!!!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேல சத்திரத்தை சேர்ந்த நாகநாத சேதுபதி என்பவர் வசித்து வருகிறார். அவருடைய மகன் அஜய் பாண்டியன் இவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான மங்களம் கொம்புவில் குத்தகைக்கு தோட்டம் எடுத்து ஏலக்காய் விவசாயம் செய்துவந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் தனது நண்பர் கல்யாண சுந்தரம் என்பவரிடம் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு சென்று இருக்கின்றார். நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள பாறையில் இறங்கிய அஜய் பாண்டியனை கல்யாணசுந்தரம் செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அஜய் பாண்டி திடீரென பாறையில் இருந்து வழிக்கி  நீர்வீழ்ச்சி தடாகத்தில் விழுந்துள்ளார். இதில் அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இது பற்றிய தகவல் அறிந்த காந்தி குடி போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் நீர்வீழ்ச்சியில் வீழுந்த வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மூன்றாவது நாளாக இன்று அவரை தேடும்படி நடைபெற்றது. புல்லாவெளி நீர்வீழ்ச்சி வழியாக பாயும் தண்ணீர் ஆத்தூர் காமராஜர் அணைக்கு சென்றுள்ளது.

இதனால் நீர்வீழ்ச்சியில்  தவறி விழுந்து அஜய் பாண்டியன் காமராஜ் அணைக்கு அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் அணைக்கு  தண்ணீர் வரும் கன்னிமார் கோவில் பகுதியில் தேடி வந்திருக்கின்றனர். மேலும் கொட்டும் கனமழையும் பொருட்படுத்தாமல் தீயணைப்பு படையினர் தேடி வருகின்றார்கள். இந்தநிலையில்  நேற்று மாலை 6 மணி வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் அஜய் பாண்டியனை தேடும் பணி நாளை மீண்டும் நடைபெறும் என தீயணைப்பு வீரர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *