புற்று நோய் பாதித்தவர்…. ரயில் மோதி உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூரில் 50 வயது நபர் ஒருவரின் மீது ரயில் மோதிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் சாலையில் உள்ள ரயில் தண்டவாளத்தின் மீது சென்று கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க நபரின் மீது டெல்லி-திருவனந்தபுரம் செல்லும்  விரைவு ரயில் ஒன்று அவர் மீது மோதியது. ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதனை பார்த்த ரயில் ஓட்டுனர் உடனே ரயிலை நிறுத்தினார். பின்பு இந்த தகவலை கோயம்பத்தூர் ரயில்வே காவலரிடம் தகவல் தெரிவித்தனர்.

இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ரயிலில் சிக்கிய நபரை மீட்டு எடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து அவரது உடமைகளை ஆய்வு செய்தபோது அவர் ஒரு புற்று நோயாளி என்பதும் அவர் அதற்கான சிகிச்சை எடுத்து வருவதும் தெரியவந்தது. அவரை பற்றிய தகவல்களையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *