பண்டைய காலங்களில் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு புறாக்கள் மூலம் ஓலைகள் மற்றும் கடிதங்கள் அனுப்பப்பட்டன. ஆனால் புறாக்கள் கடிதங்களை எப்படி தங்கள் இலக்குக்கு கொண்டு சென்றன என்பது இன்றும் பலரது சந்தேகமாக உள்ளது. புறாக்களில் உள்ள ஒரு தனித்துவமான அமைப்பு ஜிபிஎஸ் போல வேலை செய்கின்றது. இதனால் புறா தான் கடந்து வந்த பாதையை மறக்காது. புறாக்கள் புதிய வழிகளை ஆராய்வதற்காக மாக்ரிடோரிசெப்ஷன்  என்ற நுட்பத்தை வெளிப்படுத்துகின்றன.

புறாவின் விழித்திரையில் உள்ள ஒரு சிறப்பு வகை புரதம் நல்ல பார்வையை வழங்குகின்றது. மேலும் புறாக்கள் பூமியின் காந்த சக்தி மிகச் சிறிய அளவில் வேறுபடுவதையும் உணர வல்லவை. அந்தத் திறனால் அவை எங்கு கொண்டு சென்று விடப்பட்டாலும் தாம் வாழ்ந்து பழகிய இடத்துக்குத் திரும்பி வருவதில் அவற்றுக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதில்லை.