புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களான கழக தொண்டர்களின் சார்பாக….. மாயத்தேவர் மறைவிற்கு சசிகலா இரங்கல்..!!

 மாயத்தேவர் காலமான நிலையில், வி.கே சசிகலா அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் முதல் முறையாக நடைபெற்ற திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில் கழகத்தின் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு எம்பி ஆன மாயத்தேவர் (88) சின்னாளபட்டியில் இன்று உடல்நலக்குறைவால்  காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வி.கே சசிகலா இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கழக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு.K. மாயத்தேவர் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரமடைந்தேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் அவர்கள் உருவாக்கியபின் முதன் முதலாக கழகத்தின் சார்பாக திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று புரட்சித்தலைவருக்கு பெருமை சேர்த்தவர்.

திரு.K.மாயத்தேவர் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு, புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களான கழக தொண்டர்களின் சார்பாக, எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்..

முன்னதாக ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் மாயத்தேவர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *